.

நரம்பு மண்டலம் என்றால் என்ன? அவற்றின் பணிகள்

 நரம்பு மண்டலம் :

மனிதனுக்கு நன்கு வளர்ச்சியடைந்த நரம்பு மண்டலம் அமையப் பெற்றுள்ளது.

நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம், உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் உள்ளன. 

நரம்பு மண்டலம் என்றால் என்ன? அவற்றின் பணிகள்

நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன. 

 மூளை : 

இது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி ஆகும். இது உடல் முழுவதும் நடைபெறும் அனைத்து செயல்களையும் கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்துகிறது.

இதையும் படிக்க : சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய பெண்மணி!

 மேலும் இது நினைவாற்றல் மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றின் உறைவிடமாக அமைகிறது.

நரம்பு மண்டலம் என்றால் என்ன? அவற்றின் பணிகள்

நமது மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின் கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படிக்க : வங்கி பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி உத்தரவு!

 இந்த சவ்வுகளுக்கு மூளை உறைகள் (Meninges) என்று பெயர். மூளையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை என்பவையாகும். மூளையானது உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.

 தண்டுவடம் :

இது மூளைத் தண்டின் மூலம் நீட்சியாக கீழ்நோக்கி செல்லும் உறுப்பு நரம்பு நார்களினால் ஆன இது மூளைக்கும், மூளையிலிருந்தும் சமிக்ஞைகளை கடத்துகிறது. இது மூளையுடன் இணைந்து மத்திய நரம்பு மண்டலமாகிறது.


தண்டுவடம் பின்மூளையில் உள்ள
முகுளத்தின் தொடர்ச்சி ஆகும். இது முதுகெலும்புத் தொடரினால் மூடப்பட்டிருக்கின்றது. 

தண்டுவடமானது, மூளையை உடலில் உள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக்கூடிய அமைப்பாக உள்ளது.

பக்க நரம்புகள் :

இவை நரம்புகள் மற்றும் நரம்புத்திரள்கள் இணைந்து உருவான வலை பின்னல் போன்ற அமைப்புகள் மூலம் மத்திய நரம்பு மண்டலத்திற்கும், மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து முழு பகுதிகளுக்கு சமிக்ஞைகள் கடத்தப்படுகின்றன.  

 நரம்பு மண்டலத்தின்  பணிகள் :

1) உணர்ச்சி உள்ளீடு :

உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்.

2) ஒருங்கிணைப்பு :

உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைத்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும்
பதில்களை உருவாக்குதல்.

3) செயல் வெளிப்பாடு : 

மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக் கடத்துதல்.
Previous Post Next Post

نموذج الاتصال